Friday, July 11, 2008

இரண்டாம் வரி







இவன் அவனிடம்,


இவ வந்து ப்ரபோஸ் பண்ணா ஒத்துப்பியா ?

எவள் ?

இவள்.

இவ ஏன்டா என்கிட்ட வந்து சொல்றா ?

சும்மாடா. இட்லி வர வரைக்கும் எதாவது பேசுவோம்.



ஏன்டா முறைக்ற ?

முறைக்கல. இத கேளு. நாமபேசினத அப்டியே எழுதினோம்னா "ஏன்டா முறைக்ற? அவன் கேட்டான்"னு ஒரு வரி எழுதிட்டா. ம்?

ம்.

அதுக்கு முன்னாடி "அவன் முறைத்தான்"னு ஒரு வரி தேவ இல்ல. புரிதா ? the second line cancels the first.

இட்லி இங்கண்ணா. இங்க இட்லி. தோச அங்க. பேபர நகத்து.


இப்படி அந்த பெண்ணை அணிந்த பேப்பரை ஒதக்கி, அவர்கள் உண்ணலானர்.