Friday, July 11, 2008
இரண்டாம் வரி
இவன் அவனிடம்,
இவ வந்து ப்ரபோஸ் பண்ணா ஒத்துப்பியா ?
எவள் ?
இவள்.
இவ ஏன்டா என்கிட்ட வந்து சொல்றா ?
சும்மாடா. இட்லி வர வரைக்கும் எதாவது பேசுவோம்.
ஏன்டா முறைக்ற ?
முறைக்கல. இத கேளு. நாமபேசினத அப்டியே எழுதினோம்னா "ஏன்டா முறைக்ற? அவன் கேட்டான்"னு ஒரு வரி எழுதிட்டா. ம்?
ம்.
அதுக்கு முன்னாடி "அவன் முறைத்தான்"னு ஒரு வரி தேவ இல்ல. புரிதா ? the second line cancels the first.
இட்லி இங்கண்ணா. இங்க இட்லி. தோச அங்க. பேபர நகத்து.
இப்படி அந்த பெண்ணை அணிந்த பேப்பரை ஒதக்கி, அவர்கள் உண்ணலானர்.
Thursday, July 10, 2008
தசாவதாரம்
அவன் இவனிடம் குறள் தாழ்த்தி,
இதுவும் கமலாடா ?
இல்ல.
மேக்கப் அதிகமா இருக்கே. கமல்தான்டா.
இல்ல. பத்து ஆயிடுச்சு.
சரியா எண்ணுனியா ?
ம். ரெண்டுபேரும் அவங்களேவா இல்ல வேறயாரோவா ?
கமல்டா. கலைஞர் மன்மோகன் ரெண்டுமே கமல்.
"Excuse me. Could you please", என்று பின்னாடி ஒருவர் இவர்களை அடக்கியும்,
இப்போ கமல் மாரி இல்ல.
அதான் சொன்னேனே. பத்து ஆயிடுச்சு.
பத்துக்கு மேல பண்ணா என்ன ?
படத்த பாரு. பேசாத!
நீயும் பேசாத!
ம்.
Wednesday, July 09, 2008
தரையில் இலை
(photo : chezhiyan)
அவனிடம் இவன்,
ஏன்டா நின்னுட்ட ?
(மௌனம்)
டேய். நடடா. பசிக்குது.
இத பாரேன்டா
வாடா. பசிக்குதுடா.
சரி. இத கேளு.
நடந்துட்டே சொல்லு.
ஒரு தரை.
ம்.
அதில் இலை.
ம்.
நிழல் இவை இடை.
ம்
அவ்ளோதான்டா. எப்படி ?
மினி இட்லி சாப்ட்டு ரொம்ப நாளாச்சு ஆனா சாம்பார் வடையும். ?? ஒரே குழப்பம்டா. உனக்கென்னடா ?
ஒரு இட்லி. பொடியோட.
ம்.
இவ்வாறு அவர்கள் அக்கவிதையை அங்கேயே விட்டுச்சென்றார்கள்.
Tuesday, July 08, 2008
மாயர் நாகரீகம்
Thursday, July 03, 2008
கொண்ட பட்டம்
கங்கையை கொண்டான்.
அதனால் அவன் "கங்கை கொண்ட" ராஜேந்திர சோழன்.
அதுசரி. ஆமா, நான் என்ன கொண்டேன் ?
எதையோ நினைத்து சிரித்து கொண்டேன்.
"எதையோ நினைத்து சிரித்து கொண்ட" பூபா !!
அப்ப நான் "எதையோ நினைத்து சிரித்து கொண்ட" பூபாவா ?
கங்கை கொண்டான்;
வாதாபி கொண்டான்;
கடாறம் கொண்டான்;
.
.
.
.
காலைல எதையோ உட்கொண்டான்;
வேலைய நினைத்து சலித்துக்கொண்டான்;
எதையோ நினைத்து சிரித்து கொண்டான்;
அதனால் அவன் "கங்கை கொண்ட" ராஜேந்திர சோழன்.
அதுசரி. ஆமா, நான் என்ன கொண்டேன் ?
எதையோ நினைத்து சிரித்து கொண்டேன்.
"எதையோ நினைத்து சிரித்து கொண்ட" பூபா !!
அப்ப நான் "எதையோ நினைத்து சிரித்து கொண்ட" பூபாவா ?
கங்கை கொண்டான்;
வாதாபி கொண்டான்;
கடாறம் கொண்டான்;
.
.
.
.
காலைல எதையோ உட்கொண்டான்;
வேலைய நினைத்து சலித்துக்கொண்டான்;
எதையோ நினைத்து சிரித்து கொண்டான்;
Subscribe to:
Posts (Atom)